ஒரு பிரச்சனைக்கு என்றுமே இரண்டு வகையான தீர்வு உண்டு. ஒன்று - தொலை நோக்கு பார்வையுடன் அலசி ஆராய்ந்து முழுமையாக அந்த பிரச்சனையை தீர்ப்பது. இரண்டு - தற்காலிகமாய்... அவசரமாய்...தவறாக... பிரச்சனையை முழுவதும் தீர்க்காத ஒரு வழியை பின் பற்றுவது.
சற்று சிந்தித்து பார்த்தால் நாம் என்றுமே இரண்டாவது தீர்வை தான் தேர்ந்து எடுத்து இருக்கிறோம். ஏன்?
எந்த ஒரு பிரச்சனைக்கும் இது வரை முழுமையான ஒரு தீர்வை நமது பள்ளியோ? சமுதாயமோ? அரசோ? அதிகாரிகளோ? நமக்கு கொடுத்தது இல்லை ..
இன்றைய அரசு முடிந்த வரை இலவசங்களை அள்ளிவீசி ஆட்சியை பிடித்து முடிந்த வரை சுருட்ட நினைக்கிறதே தவிர அதனால் ஏற்படும் பொருளாதார சீர்கேட்டை பற்றி கொஞ்சமும் கவலை படவில்லை.
ஒரே சாலையை பல முறை போடுவார்கள். ஆனால் ஒரே முறை ஒழுங்காக போட மாட்டார்கள்.
கலர் டிவி வீடு வீடாக கொடுபார்கள் . ஆனால் கரண்ட் வீட்டுக்கு கிடைக்காது. ஒருவருக்கு இரண்டு ஏக்கர் நிலமாம் , ஆனால் அதை வைத்து விவசாயம் செய்ய முடியாது.
கடல் நீரை குடி நீராய் மாற்ற திட்டம். ஆனால் கூவத்தை சுத்தம் செய்ய மாட்டார்கள். மழை நீரை சேகரிக்க மாட்டார்கள். குளத்தை மாசுபடுதுவார்கள். தண்ணீர் பாயும் இடங்களை பிளாட் போட்டு விற்று விடுவார்கள்.
இதை போல பல பல திட்டங்கள் ... எல்லாம் மக்களை ஏமாற்ற ... இவற்றால் என்ன நன்மை? இதை பற்றி யாரும் யோசிப்பது இல்லை, யாருக்கும் கவலையும் இல்லை.
சரி.... அரசை, அதிகாரிகளை திட்டியாச்சு. அடுத்த பதிவில் மக்களின் தவறான போக்கை பற்றி பேசலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment