Tuesday, November 11, 2008

எங்கிருந்து வந்தது?

மாதம் 50000 ரூபாய் சம்பளம், வசதியான வீடு (வாடகை தான்), சான்ட்ரோ கார், நல்ல பள்ளியில் குழந்தைகள், வாரம் ஒரு முறை சரவணா பவன், சத்யம் சினிமா, வருடம் ஒரு முறை ஊட்டி, கொடைக்கானல். மேலே கூறியது ஒரு above average குடும்பத்தின் life sytle. இவரால், தலைகீழால் நின்று தண்ணீர் குடித்தாலும் சென்னையில் பிளாட் கூட வாங்க முடியாது.

மாதம் 20000 ரூபாய் சம்பளம், அடையார்/ஆள்வார்பெட்'இல் தனி வீடு, BMW கார், ஊரு பக்கம் நூறு ஏக்கர் தோப்பு, வருடம் பல முறை வெளிநாடு பயணம்.
டேய், டேய் ... 20000 ரூபாயில் இது எப்படி சாத்தியம்னு நீங்க கேக்கறது எனக்கு புரிகிறது. நீங்கள் கேட்க வேண்டியது என்னிடமல்ல, உங்க MLA/MP, Minister கிட்ட பொய் கேளுங்க. மாதம் அவங்க வாங்குற சம்பளத்துல இந்த அளவுக்கு எப்படி அவர்களால் சொத்து சேர்க்க முடியும்னு கேளுங்க?

ஊருக்கே தெரியுது தப்பு நடந்து இருக்குன்னு, கேள்வி கேட்க இங்க யார் இருக்கா?
ஓஹோ இது தான் ஜனநாயகமா? சபாஷ் ....
இந்தியா தான் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு ....

No comments: