
கடமையை கட்டுப்பாடுடன் செய்யாமல் இருந்த காவல்துறைக்கு கோடி வணக்கங்கள். நேற்று செய்தி கேட்ட / பார்த்த யாருக்கும் மனம் பதைது போயிருக்கும்.
அடித்து கொண்டவர்கள் - சட்டம் படித்து நாளைய இந்தியாவின் நீதிபதிகளாய் நாட்டை காப்பாற்ற வேண்டியவர்கள்.
வேடிக்கை பார்த்தவர்கள் - இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை ஊழியர்கள்.
நல்ல ஆட்சி.
அடித்தவர்கள் எதற்கு அடித்தார்கள், அதற்கான காரண காரியம் பற்றி நாம் பேச வேண்டாம். ஆனால், இப்படி ஒரு கலவரம் நடந்து கொண்டிருக்கும் பொழுது சுமார் 10 - 15 காவல்துறையினர் எதுவுமே நடக்காதது போல் வேடிக்கை பார்த்து காட்சி அனவைரின் நெஞ்சிலும் ரத்தம் கசிய வைத்து விட்டது. காவலர்களின் கடமை என்பதை விட்டாலும்சாதாரண மனித மனம் உள்ள யாரும் இதை பார்த்து கொண்டு இருந்திருக்க மாட்டார்கள்.
சினிமாவில் வருவது போல், அனைத்தும் முடித்த பிறகு குற்றுயிரும் குலையுயுருமாய் இருந்த மாணவனை தூக்கி சென்றார்கள்.
வாழ்க காவல்துறையின் சேவை. தயவு செய்து இனி, காவல்துறை பொது மக்களின் நண்பன் என்று சொல்லாதீர்கள். மக்கள் முட்டாள் அல்ல.
No comments:
Post a Comment